/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புகையிலை பொருட்கள் விற்றவர்களுக்கு அபராதம்
/
புகையிலை பொருட்கள் விற்றவர்களுக்கு அபராதம்
ADDED : ஆக 30, 2025 04:35 AM
பெரியகுளம்: ''பள்ளி அருகே சிகரெட், புகையிலை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.'' என, பெரியகுளம் நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.
இந்நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அசன் முகமது, பணியாளர்கள் பாலிதீன் ஒழிப்பு ரெய்டு நடத்தினர். பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஓட்டல்கள், டீ கடைகள், மளிகை, பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பெட்டிக் கடையில் 40 பாக்கெட்டுகள் சிகரெட் கைப்பற்றப்பட்டன. அனைத்து கடைகளுக்கும் ரூ.13,500 அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் தமிஹா சுல்தானா எச்சரிக்கை விடுத்தார்.-

