/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிறுவனங்கள் பட்டாசுக்கு பதில் கூப்பன் வழங்கினால் விபத்தை தவிர்க்கலாம் தீயணைப்பு, மீட்புப் பணி மாவட்ட அலுவலர் ஆலோசனை
/
நிறுவனங்கள் பட்டாசுக்கு பதில் கூப்பன் வழங்கினால் விபத்தை தவிர்க்கலாம் தீயணைப்பு, மீட்புப் பணி மாவட்ட அலுவலர் ஆலோசனை
நிறுவனங்கள் பட்டாசுக்கு பதில் கூப்பன் வழங்கினால் விபத்தை தவிர்க்கலாம் தீயணைப்பு, மீட்புப் பணி மாவட்ட அலுவலர் ஆலோசனை
நிறுவனங்கள் பட்டாசுக்கு பதில் கூப்பன் வழங்கினால் விபத்தை தவிர்க்கலாம் தீயணைப்பு, மீட்புப் பணி மாவட்ட அலுவலர் ஆலோசனை
ADDED : அக் 17, 2025 01:57 AM

நி றுவனங்கள், கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 'கிப்ட்' ஆக பட்டாசு பார்சல்கள் நேரடியாக வழங்குவதற்கு பதிலாக அதற்குரிய கூப்பன்களை வழங்கி சம்மந்தப்பட்ட பட்டாசு கடைகளில் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்தால் பட்டாசு விபத்துக்களை தவிர்க்கலாம் என தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் ஜெகதீஸ் தெரிவித்தார்.
தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் கீழ் தேனி, பெரியகுளம், கம்பம், போடி உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன.
தீபாவளி பண்டிகை அக்., 20ல் கொண்டாட உள்ள நிலையில் எவ்வாறு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ் தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது
பட்டாசு வகைகளில் எத்தனை பொதுவாக ஒலி, ஒளி எழுப்பும் பட்டாசுகள், சிறியவகை பட்டாசு பேன்சிரக பட்டாசு நான்குவகையாக பிரித்துள்ளோம். பேரியம் நைட்ரேட், சல்பர், கரி ஆகியவை கலந்தவை சப்தம் வராது. மெட்டல் பவுடர் இணைத்த பட்டாசுகள் சப்தம் வரும்.
இதில் அனைத்து வகைகளும் உற்பத்திக்கான அங்கீகாரம் பெற்றவையாகும். அதிக காகிதம் சுற்றி, நடுவில் வெடிபொருள் வைத்து வெடிக்கப்படும் நாட்டு ரக பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகையின் போது இவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்டால் பொது மக்கள் போலீசில் புகார் அளிக்கலாம். ஏனெனில் வெடி வெடித்தவுடன் ரோடு முழுவதும் காகித குப்பையாகி சுத்தம் செய்துவது பணியாளர்களுக்கு சிரமமாகிறது.
பட்டாசு வெடிக்க பாதுகாப்பு பற்றி சிறுவர்கள், பெரியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது தளர்வான பருத்தி ஆடைகள், செருப்பு அணிந்துதான் பட்டாசு வெடிக்க வேண்டும். வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்வது அவசியம்.
பெண்கள் சிந்தெட்டிக் ஆடைகளை அணிந்து வெடிக்கும் போது அலட்சியத்தால் தீ பற்றினால் ஆடைகளில் உடலில் ஒட்டி பாதிப்பு அதிகரித்துவிடும்.
இந்த அபாயத்தை உணராமல் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
பட்டாசுகளை 'கிப்ட்' ஆக வழங்குவது சரிதான் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாட்களில் சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுகளை நேரிடையாக வழங்கினர். இதற்காக வாங்கிய பட்டாசுகளை பாதுகாப்பற்ற சூழலில் வைத்திருந்தனர். இதனால் சில விபத்துக்கள் நடந்தன. இதனை தவிர்க்க நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு கிப்ட் கூப்பனாக வழங்கினால் அதனை அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு கடைகளில் வழங்கி பட்டாசு வாங்கி செல்வார்கள். இதனால் எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்களை தவிர்க்கலாம்.
பட்டாசு கடைகளில் பாதுகாப்பு பற்றி பட்டாசு கடைகளில் இருவழி பாதை அவசியம். இந்த பாதை இருந்தால் எதிர்பாராத விபத்து நடந்தாலும் எளிதாக தப்பிக்கலாம். மண், தண்ணீர் நிரப்பிய வாளி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு முன்னும், உட்புறமும் மின் அலங்கார விளக்குகள் அமைக்க கூடாது. விற்பனையில் அனுபவம் வாய்ந்த நபர்களை மட்டும் பட்டாசுகளை எடுத்து வழங்க அனுமதிக்க வேண்டும்.
எதிர்பாராத விதமாக ஒரு பெட்டியில் தீ பற்றினால் ஊழியர் சமயோசிதமாக அதை மட்டும் வெளியில் எடுத்து சென்று அகற்ற வேண்டும்.
இருவழி உள்ள கடைகளில் 99 சதவீதம் விபத்து நடப்பது அரிது. இதனை விற்பனையாளர்கள் கருத்தி கொண்டு பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும்.
தற்காப்பு ஆலோசனை சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். காலணி அணிந்து இருக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட கூடாது. திறந்த வெளியில் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். உடலில் தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை ஊற்றி உடனே மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும் என்றார்.