ADDED : அக் 17, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: குச்சனுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (அக்.,18) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மருத்துவ முகாம் நடக்கிறது. இம் முகாமில் அடிப்படை, உயர்நிலை மருத்துவப்பரிசோதனைகள், முழு உடல் பரிசோதனைகள், காசநோய், தொழுநோய், புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.
முதல்வர் காப்பீட்டு திட்டம் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகள் அங்கீகார சான்று வழங்குதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.