/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அவசர தேவைக்கு தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்
/
அவசர தேவைக்கு தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்
ADDED : அக் 17, 2025 01:56 AM
பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் விபத்து முதலுதவி குறித்து தன்னார்வலர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.
மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை வகித்தார். விபத்தில்லா தமிழ்நாடு திட்டத்தில் தேனி மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் நடக்கும் 45 இடங்களை தேர்வு செய்து பொதுமக்களுக்கு சாலை விபத்து ஏற்படும் போது எவ்வாறு முதலுதவி செய்து உயிர்களை காப்பாற்றுவது குறித்து விளக்குவது நோக்கமாகும்.
மாவட்டத்தில் ஹாட்ஸ்பாட் சாலைகளின் தன்மைகளை கருத்தில் கொண்டு 26 ஆம்புலஸ்கள், ஒரு டூவீலர் ஆம்புலன்ஸ் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது.
சாலை விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்க வேண்டும் என செயல் விளக்கத்துடன் பயிற்சியளிக்கப்பட்டது. உடல் உபாதைகள், சுற்றுப்புறச்சூழல்களால் ஏற்படும் அவசரங்கள், உயிர்காக்கும் அடிப்படை செயல்முறை குறித்து முதலுதவி பயிற்றுநர்கள் ரஞ்சித், ஆண்டிமுத்து வழங்கினர். பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் பாலசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர்கள் ரத்தினவேல், சூரிய செல்வம் செய்திருந்தனர்.