ADDED : அக் 17, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் எதிரில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் நாகராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாராம்பாண்டியன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மன்ற நிர்வாகி பெரியசாமி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி கணேசன் உட்பட பலர் பேசினர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் மலைச்சாமி நன்றி கூறினார்.