/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் 'ஆரஞ்ச் அலர்ட்' நீர்நிலை சுற்றுலா நிறுத்தம்
/
இடுக்கியில் 'ஆரஞ்ச் அலர்ட்' நீர்நிலை சுற்றுலா நிறுத்தம்
இடுக்கியில் 'ஆரஞ்ச் அலர்ட்' நீர்நிலை சுற்றுலா நிறுத்தம்
இடுக்கியில் 'ஆரஞ்ச் அலர்ட்' நீர்நிலை சுற்றுலா நிறுத்தம்
ADDED : அக் 17, 2025 01:55 AM

மூணாறு: கேரளா இடுக்கி மாவட்டத்தில் நேற்று விடுக்கப்பட்ட கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' இன்றும் தொடர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்தது.
இருப்பினும் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி இடுக்கி உட்பட எட்டு மாவட்டங்களுக்கு நேற்று பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' ஏற்கனவே விடுக்கப்பட்ட நிலையில், இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்தது.
திருவனந்தபுரம் உட்பட ஏழு மாவட்டங்களுக்கு ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவெளி விட்டு பலத்த மழை பெய்தபடி இருந்தது.
இம்மாவட்டத்திற்கு' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டதால், வழக்கம் போல் சுற்றுலா படகுகள் உட்பட நீர்நிலை சுற்றுலாக்கள் நிறுத்தப்பட்டன. இன்றும் (அக். 17) கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.