/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பர்னிச்சர் கடையில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
/
பர்னிச்சர் கடையில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
ADDED : ஆக 13, 2025 02:25 AM

மூணாறு: மூணாறு அருகே ஆனச்சாலில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து தீக்கிரையாகின.
ஆனச்சாலைச் சேர்ந்த வர்க்கி, அதே பகுதியில் அடிமாடி ரோட்டில் ஐந்து மாடி கட்டடத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
அதிகாலை 2:00 மணிக்கு கடைக்குள் இருந்து புகை கிளம்பிய நிலையில் திடிரென தீப்பற்றி கட்டடம் முழுவதும் வேகமாக தீ பரவியது. அதனை பார்த்த சிலர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர். அடிமாலி தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் கடை முற்றிலுமாக எரிந்து பொருட்கள் எரிந்து தீக்கிரையாகின.
வெள்ளத்தூவல் போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.