ADDED : ஜூலை 23, 2026 12:35 AM

அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: பெரியகுளம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி உதவி மாவட்ட அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
சர்க்கரை ஆலை துணைப்பொது மேலாளர் ராமமூர்த்தி, பாதுகாப்பு அலுவலர் அன்பரசு, மனித வள மேலாளர் தீபன்ராஜ், இயந்திரவியல் மேலாளர் அசோக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சுப்புராம் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் தீயணைப்பு அலுவலர் முத்துச்செல்லப்பாண்டி மற்றும் வீரர்கள், தீயணைப்பு கருவிகளை பாதுகாப்பாக எவ்வாறு கையாள்வது,
தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசரகால நடவடிக்கைகள், பாதுகாப்பாக வெளியேறும் வழி முறைகள், முதலுதவி தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆலை பணியாளர்கள் பங்கேற்றனர்.
