/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்று தீயணைப்பு நிலையங்கள் கட்ட ரூ.7.38 கோடி ஒதுக்கீடு தீயணைப்பு அலுவலர் தகவல்

ADDED : அக் 01, 2025 07:42 AM
தேனி : மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டடத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலகம், தேனி தீயணைப்பு நிலையம், சின்னமனுார், மயிலாடும்பாறையில் 3தீயணைப்பு நிலையங்கள் கட்டுவதற்கு அரசு ரூ.7.38 கோடி நிதி ஒதுக்கியுள்ளது,'' என, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ் தெரிவித்தார்.
தேனி பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டடத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலகம், தேனி தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக ஐந்தாண்டுகளுக்கு முன் இடம் ஒதுக்கப்பட்டு யாரும் ஆக்கிரமிக்காத வகையில் 2 ஆண்டுகளாக இரவு பகலாக தீயணைப்புத்துறை வீரர்கள் காவல் காத்து வந்தனர். இந்நிலையில்தேனி, சின்னமனுார், மயிலாடும்பாறை உள்ளிட்ட 3 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.7கோடியே 38 லட்சத்து 91 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்திட்ட வளாகத்தில் நிலத்திற்கான கட்டுமானம் துவங்க வருவாய்நிர்வாக செயலாளர் ஒப்புதல் பெறபரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அலுவலர் கூறியதாவது: தேனி தீயணைப்பு நிலைய ஒருங்கிணைந்த கட்டடத்திற்கு ரூ.2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம். சின்னமனுார் தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.2 கோடியே 42 லட்சத்து91 ஆயிரம், மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.2 கோடியே 44 லட்சத்து 31 ஆயிரம் எனமொத்தம் ரூ.7.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் காவலர் வீட்டுவசதி வாரியம் மூலம் விரைவில் துவங்க உள்ளன' என்றார்.