ADDED : அக் 01, 2025 07:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32ம் ஆண்டு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
ஒன்பதாம் நாளான நேற்று வெங்கடாசலபதி, அலமேலு மங்கை அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து லலிதா சகஸ்ர நாமாவளி பூஜை நடந்தது. முன்னதாக 1008 மரக்கிளிகள் வைத்து சிலகலு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்ய வைசிய மகாஜன சங்கம், மகிளா சபையினர் செய்திருந்தனர்.