UPDATED : ஜூலை 07, 2026 05:39 PM
ADDED : ஜூலை 07, 2026 05:02 PM
தேனி:கஞ்சா கடத்திய வழக்கில் கம்பம் நாகூர்கனி 36, என்பவரை கூடலுார் வடக்கு போலீசார் கைது செய்தனர். மற்றொரு கஞ்சா கடத்தில் வழக்கில் கம்பம் வடக்கு போலீசார் ஈஸ்வரன் 48, என்பவரை கைது செய்திருந்தனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி., பிரவீன் கவுதம் கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார்.
அதே போல் இடுக்கியை சேர்ந்த பெருமாள்சாமி 47 என்பவரை சி.பி.ஐ., அதிகாரிகள் என கூறி பழனிசெட்டிபட்டி அருகே காரில் கடத்திய வழக்கில் திண்டுக்கல் நாகநரேந்திரன் 43, சீலையம்பட்டி கருப்பையா 46, வடவீரநாயக்கன்பட்டி பொன்னுச்சாமி 61 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு எஸ்.பி., பரிந்துரை செய்திருந்தார். நாக நரேந்திரன் , பொன்னுச்சாமி இருவரும் முன்னாள் போலீஸ்காரர்கள் ஆவார். ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டார். தொடர்ந்து 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
