/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை
ADDED : அக் 16, 2025 05:46 AM

தேனி: வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, தாக்கிய சுதாகரனுக்கு ஐந்தாண்டுகள் சிறை, ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆண்டிபட்டி தாலுகாவை சேர்ந்த தம்பதியின் 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி. 2022 ஜூன் 29ல் இரவில் வீட்டில் சிறுமி துாங்கிக் கொண்டிருந்தார். அதே பகுதி காளியம்மன் கோயில் தெரு 15 வயது சிறுவன், சுதாகரன் 22, இருவர் அத்துமீறி வீட்டின் உள்ளே நுழைந்தனர். சுதாகரன் துாங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல்இடையூறு செய்தார். சிறுவன் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்து போது, சிறுமி சத்தமிட்டுள்ளார்.
இதனால் இருவரும் இணைந்து தாக்கியதில் சிறுமியின் முகத்தில் காயம் ஏற்பட்டன. சிறுமியின் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் சிறுமியை காப்பாற்றினர்.
வருஷநாடு போலீசார் சிறுவன், சுதாகரன் ஆயோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். 15 வயது சிறுவன் மீது பதிவு செய்த வழக்கு சிறார் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சுதாகரன் மீது விசாரணை நடந்தது.
அரசு வழக்கறிஞர் ரக்ஷிதா ஆஜரானார். நேற்று விசாரணை முடிந்து சுதாகரனுக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.36 ஆயிரம் அபராதம்விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.7 லட்சம் அரசு வழங்க தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.