/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்ற உத்தரவால் தேனியில் கொடி கம்பம், பீடங்கள் அகற்றம்
/
நீதிமன்ற உத்தரவால் தேனியில் கொடி கம்பம், பீடங்கள் அகற்றம்
நீதிமன்ற உத்தரவால் தேனியில் கொடி கம்பம், பீடங்கள் அகற்றம்
நீதிமன்ற உத்தரவால் தேனியில் கொடி கம்பம், பீடங்கள் அகற்றம்
ADDED : ஜூன் 14, 2025 05:52 AM

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஜாதி அமைப்புகளின் கொடி கம்பங்கள், அதன் பீடங்கள் அகற்றப்பட்டது.
கடந்த ஜன.28 ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை, அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்றவும், தவறினால் அரசு சார்பில் அகற்றிவிட்டு, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட கட்சி அமைப்புகளிடம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி நகராட்சியில் 33 வார்டுகளில் அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள், தொழிற்சங்க கொடி கம்பங்கள் அகற்றிவிட்டு, பீடங்களை அகற்றாமல் இருந்தனர். கமிஷனர் ஏகராஜ் உத்தரவில், நகர்நல ஆய்வாளர் சலீம், ஆர்.ஐ., முனீஸ் தலைமையில் நேற்று என்.ஆர்.டி., நகரில் மெயின்ரோடு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக நுழைவாயில் முன் இருந்த தொழிற்சங்க கம்பங்கள் 8, பீடங்கள் ஆகியவற்றை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.