/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் வயல்களுக்குள் புகுந்த வெள்ள நீர்: விவசாயிகள் கவலை
/
நெல் வயல்களுக்குள் புகுந்த வெள்ள நீர்: விவசாயிகள் கவலை
நெல் வயல்களுக்குள் புகுந்த வெள்ள நீர்: விவசாயிகள் கவலை
நெல் வயல்களுக்குள் புகுந்த வெள்ள நீர்: விவசாயிகள் கவலை
ADDED : டிச 16, 2024 05:53 AM

சின்னமனுார் : சின்னமனுார் சின்ன வாய்க்கால் கரை உடைந்து நெல் வயல்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 17 வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் நெல் சாகுபடிக்கு திறந்து விடப் படுகிறது. கூடலூரில் இருந்து பழநிசெட்டிபட்டி வரை 17 வாய்க்கால்கள் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக பாசன வசதி பெறுகிறது. இதில் சின்னமனுாரில் சின்ன வாய்க்கால், பெரியவாய்க்கால் என 2 வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சின்ன வாய்க்காலில் தாமரை குளம், பி.டி.ஆர்., வாய்க்கால், கருங்கட்டான்குளம் வெள்ள நீர் கலந்ததால் நேற்று பல இடங்களில் கரைகள் உடைந்து பெரிய வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ந்தது. மேலும் அருகில் உள்ள நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் நெல் பயிர்கள் நீரில் மிதக்கின்றன. வெள்ள நீரை வடித்து விடவும் வயல்களுக்குள் பரவிய மண்ணை அகற்றும் பணியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
சின்னமனுார் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராஜா கூறுகையில், 'ஆக்கிரமிப்பின் பிடியில் சின்ன வாய்க்கால் சிக்கி உள்ளது. மேலும் துார்வாரி பல ஆண்டுகள் ஆகி விட்டன. பெருமாள் கோயிலிற்கு செல்லும் வழியில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளது.
இவற்றை சீரமைக்க பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. ஆண்டுதோறும் மழை காலங்களில் இதே நிலை தான் ஏற்படுகிறது. நீர்வளத்துறை சின்ன வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.

