/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/
கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ADDED : ஏப் 05, 2025 05:28 AM

பெரியகுளம்: கோடை வெயிலால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கோடை மழையால் நேற்று கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை விதிக்கப்பட்டது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவிஉள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதி பாம்பார்புரம், வட்டக்காணல், வெள்ளகெவி பகுதியில் பெய்யும் மழை மற்றும் கும்பக்கரை அருவி பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. கோடை வெயில் தாக்கத்தால் கும்பக்கரை அருவியில் மார்ச் துவக்கத்திலிருந்து தண்ணீர் வரத்து குறைந்தது.
நேற்று காலை 11:00 மணி வரை மிக குறைந்த அளவு விழுந்த தண்ணீரில் சில சுற்றுலா பயணிகள் குளித்தனர். இந்த நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் தண்ணீர் முழுமையாக வற்றிவிடும் நிலை ஏற்பட்டது.
தலைகீழ் மாற்றமாக மதியம் 12:00 மணிக்கு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
மதியம் 1:00 மணிக்கு சாரல் மழையும், சிறிது நேரத்தில் கனமழை பெய்தது.
சுற்றுலா பயணிகள் அருவியிலிருந்து கரை ஏறினர். மதியம் 2:00 மணியளவில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, மதியம் 2:30 மணிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ரேஞ்சர் அன்பழகன், வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து சீராகும் வரை மறுதேதி குறிப்பிடாமல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தார்.
நுழைவு கேட் மூடப்பட்டது.

