/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ADDED : மே 27, 2025 01:26 AM

கம்பம்: மேகமலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை முதல் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியுள்ளதால் மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு, தூவானம், இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சாரல் பெய்ய துவங்கியது. நேற்று முன்தினம் மாலை துவங்கிய மழை விடிய விடிய பெய்துள்ளது.
இதனால் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
நேற்று காலை அருவி பகுதிக்கு சென்ற ரேஞ்சர் பிச்சை மணி தலைமையிலான வனப் பணியாளர்கள், அருவியில் அதிக நீர் வருவதால் எந்த நேரத்திலும் கூடுதல் நீர் வரத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் குளிக்க தடை விதித்தனர்.
நேற்று காலை அருவியில் குளிக்க குறைந்தளவே பயணிகள் வந்திருத்தனர். தடை விதிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பினர். வெள்ளப் பெருக்கு குறைந்தால் மட்டுமே அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவியில் இப்போதைக்கு வெள்ளப் பெருக்கு குறைய வாய்ப்பில்லை என்றும் வனத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.