/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளியில் மீண்டும் வெள்ள பெருக்கு: குளிக்க தடை
/
சுருளியில் மீண்டும் வெள்ள பெருக்கு: குளிக்க தடை
ADDED : ஜூலை 26, 2025 04:17 AM
கம்பம்: சுருளி அருவியில் நேற்று காலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ளப் பெருக்கு இருந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடி அமாவாசை என்பதால் குளிக்க அனுமதிக்கப்பட்டது.
பின் நேற்று காலை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேகமலையில் பரவலாக விடிய, விடிய மழை கொட்டியதால், அருவியில் மழை வெள்ள நீர் கொட்டியது. அதிகாலையில் அருவியை பார்வையிட்ட வனத்துறையினர் உடனடியாக குளிப்பதற்கு தடை விதித்தனர்.
நேற்று காலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தடை விதிக்கப்பட்டதால் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். வெள்ள நீர் வடிந்தால் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படும் என்று ரேஞ்சர் பிச்சை மணி தெரிவித்தார்.
இதனால் நீண்ட துாரங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.