/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருநாட்களுக்கு பின் பூக்கள் விலை சரிவு
/
இருநாட்களுக்கு பின் பூக்கள் விலை சரிவு
ADDED : ஜன 17, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பூ மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் பண்டிகை நிறைவடைந்ததால் பூக்களின் விலை குறைந்தது.
தேனியில் நேற்று மல்லிகை ரூ.ஆயிரம், ஜாதிமல்லி ரூ.500, முல்லை ரூ.700, கனகாம்பரம் ரூ.500, காகரட்டான் ரூ.500, பன்னீர்ரோஸ் ரூ.100, சம்மங்கி ரூ.120, பட்டன்ரோஸ் ரூ.200-300, கோழிகொண்டை ரூ.80, செண்டுபூ ரூ.35, செவ்வந்தி ரூ.80-120, மரிக்கொழுந்து ரூ.100, அரளி ரூ.120க்கு விற்பனையானது. துளசி வரத்து குறைந்து காணப்பட்டதால் கிலோ ரூ.50க்கு விற்பனையானது. மற்ற நாட்களில் துளசி ரூ.அதிகபட்சம் ரூ.30க்கு விற்பனையானது.