/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு
/
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு
ADDED : ஆக 03, 2025 04:31 AM
தேனி : ஆடிப்பெருக்கை முன்னிட்டு தேனி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் கோவில்கள், நீர்நிலைகளில் வழிபாடுகள் நடக்கும். இதனால் பூக்கள் பயன்பாடு அதிகரிக்கும். இதனால் நேற்று தேனி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்தது. சில நாட்களாக கிலோ ரூ. 400 வரை விற்ற மல்லிகை நேற்று ரூ. 700க்கும், முல்லைப்பூ ரூ.150 உயர்ந்து ரூ.500க்கும், ஜாதிப்பூ ரூ.100 உயர்ந்து ரூ. 400க்கும், கனகாம்பரம் ரூ.200 அதிகரித்து ரூ.700க்கும், பன்னீர் ரோஜா ரூ.200, ஓசூர் ரோஸ் கட்டு ரூ.400, சம்மங்கி ரூ. 350, கோழிக்கொண்டை ரூ. 100, செவ்வந்தி ரூ. 400, பட்டன்ரோஸ் ரூ. 300, அரளி ரூ.300, செண்டுமல்லி ரூ. 300, துளசி ரூ.30, மரிக்கொழுந்து ரூ. 100க்கும் விற்பனையானது.
வரத்து சீராக இருந்தாலும் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்ந்ததால் மாலைகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.