ADDED : நவ 27, 2025 06:05 AM

போடி: தமிழக கேரள எல்லையான போடி மெட்டில் தழுவிச் செல்லும் பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழக கேரளா மாநிலங்களை இணைக்கும் மூணாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது போடி மெட்டு. எப்போதும் பசுமையாக, குளிர்ச்சியான சூழல் நிலவும் பகுதி. தேனியில் இருந்து 22 கி.மீ., சமவெளியில் சென்றால் போடி முந்தல் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் மலைப் பாதையில் 22 கி.மீ., சென்றால் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4644 அடி உயரத்தில் போடிமெட்டு உள்ளது.
தற்போது சாரல் மழையுடன் பனிமூட்டம் நிலவுகிறது. இதனை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். மூணாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் போடிமெட்டு மலை உச்சியில் நின்றபடி பனிமூட்டம் இயற்கை அழகை ரசித்தும், செல்பி எடுத்து மகிழ்ந்தும் செல்கின்றனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், இளைஞர், இளைஞிகள், டூவீலர் ரேஸ் கிளப் உறுப்பினர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

