/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பணிகள் நிறுத்தம்: இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
கம்பம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பணிகள் நிறுத்தம்: இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கம்பம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பணிகள் நிறுத்தம்: இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கம்பம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பணிகள் நிறுத்தம்: இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : நவ 27, 2025 06:05 AM
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இம்மருத்துவ மனை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இதனால் தினமும் விபத்தில் பலியானவர்கள், நெஞ்சுவலி, தற்கொலை செய்து கொண்டவர்கள் என தினமும் இறந்தவர்களின் உடல்களுக்கு உடற்கூராய்வு நடைபெற்று வந்தது. இப்பணி நடந்த கட்டடம் பழமையானதாகும்.
அடிப்படை வசதிகள் இல்லாததாலும், உடற்கூராய்வு செய்ய செல்லும் டாக்டர்கள் அவதிப்பட்டனர்.
இதனால் இந்த கட்டடத்தை பராமரிப்பு செய்ய மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது. சில நாட்களுக்கு முன் உடற்கூராய்வு சிகிச்சை அறை பராமரிப்புப் பணிகள் நடந்தன. எனவே இங்கு அப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக உத்தமபாளையம், சின்னமனுார் அரசு மருத்துவமனைகள், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொது மக்கள் கூறியதாவது: உடற்கூராய்வு செய்யப்படும் உடல்களின் உறவினர்கள் உத்தமபாளையம், சின்னமனுார், தேனி என, அலைய வைப்பதால் கடும் அவதிக்குள்ளாக நேரிடும்., என்றனர். உத்தமபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜின்னா, ''எனக்கு இதுவரை தகவல் இல்லை. முறைப்படி வந்தால் உடற்கூராய்வு செய்து தருவோம்.'', என்றார்.
கம்பம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், ''இறந்தவர்களின் உடலை உடற்கூராய்வு செய்வது கடந்த 4 நாட்களுக்கு முன்பே நிறுத்தி விட்டோம். அந்த கட்டடம் பராமரிப்பு செய்யப்படுகிறது. இதுகுறித்து தேனி எஸ்.பி., அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில் நடப்பதற்கு ஊழியர்கள் தேவை என்றாலும் இங்கிருந்து அனுப்பி வைப்போம். கட்டடப் பணிகள் நிறைவடைந்தவுடன் வழக்கம் போல கம்பத்தில் உடற்கூராய்வு செய்யும் பணிகள் நடக்கும்.'', என்றனர். இருப்பிணும் நலப்பணிகள் இணை இயக்குனர் தலையிட்டு பொது மக்கள் அவதிப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

