/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போராட்டத்தில் உள்ளவர்களுக்கு உணவுபொருட்கள் செல்ல தடை
/
போராட்டத்தில் உள்ளவர்களுக்கு உணவுபொருட்கள் செல்ல தடை
போராட்டத்தில் உள்ளவர்களுக்கு உணவுபொருட்கள் செல்ல தடை
போராட்டத்தில் உள்ளவர்களுக்கு உணவுபொருட்கள் செல்ல தடை
ADDED : செப் 30, 2025 05:19 AM
தேனி: தேனி ஒன்றியம், பூமலைக்குண்டு ஊராட்சியில் கிராம வருவாய் தரிசு நிலம் 89 ஏக்கரை போலி ஆவணங்கள் தயாரித்து கோவையை சேர்ந்த நிறுவனத்திற்குபத்திரப்பதிவு செய்து கொடுத்த நில புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தியும் கிராம மக்கள் செப்., 24 முதல்6 நாட்களாக ஆக்கிரமித்த நிலத்தில் தங்கி சமைத்து சாப்பிட்டு, போராடி வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு சென்ற பெரியகுளம் சப்கலெக்டர் ரஜன்பீடனிடம் கிராம குறைகளை தெரிவிக்கமறுத்தனர். வீரபாண்டி போலீசார் போராட்டத்தில் உள்ளவர்களுக்கு சமையல் பொருட்கள்கொண்டு செல்லாதவாறு போராட்ட இடத்திற்கு செல்லும் ரோட்டை பேரிகார்டுகள் வைத்து தடை ஏற்படுத்தினர்.
இதனால் தண்ணீரை தவிர உணவு இல்லாததால் பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று கிராமத்தினர் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி அழைப்பின் பேரில் அவரை சந்திக்க உள்ளனர்.