/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதிர்வுதொகை வழங்காத நிதி நிறுவனம் முற்றுகை
/
முதிர்வுதொகை வழங்காத நிதி நிறுவனம் முற்றுகை
ADDED : ஜன 04, 2024 06:25 AM

பெரியகுளம்: பெரியகுளத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் முதிர்வு பணத்தை வழங்காத தனியார் நிதி நிறுவனம் முற்றுகையிடப்பட்டது.
இப்பகுதியின் தண்டுப்பாளையம் மெயின் ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் 7 ஆண்டுகளாக செயல்படுகிறது. திருப்பூரைச் சேர்ந்த அப்பாஸ்கான் உரிமையாளராக உள்ளார்.
பெரியகுளம் தாலுகா உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இங்கு டெபாசிட் பணத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு வட்டியுடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மூன்று மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு தொகை வழங்கப்படவில்லை.
இதனால் நேற்று மதியம் 1:00 மணி அளவில் 30 க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள், தங்களுக்கு முதிர்வு தொகை சுமார் ரூ.8 லட்சம் வரை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர் என கூறி தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். வடகரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.