/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனத்துறை, -எஸ்டேட் நிர்வாகம் மோதல் ; குடிநீர் பிரச்னையில் போலீசார் சமரசம்
/
வனத்துறை, -எஸ்டேட் நிர்வாகம் மோதல் ; குடிநீர் பிரச்னையில் போலீசார் சமரசம்
வனத்துறை, -எஸ்டேட் நிர்வாகம் மோதல் ; குடிநீர் பிரச்னையில் போலீசார் சமரசம்
வனத்துறை, -எஸ்டேட் நிர்வாகம் மோதல் ; குடிநீர் பிரச்னையில் போலீசார் சமரசம்
ADDED : பிப் 23, 2024 05:37 AM
சின்னமனூர் : ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யும் விவகாரத்தில் வனத்துறைக்கும், தேயிலை எஸ்டேட் நிர்வாகத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.
மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மேல்மணலாறு , கீழ்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு , மகாராஜா மெட்டு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு, பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை தேயிலை எஸ்டேட் நிர்வாகம் செய்து தருகிறது. காரணம் குடியிருப்புகள் அனைத்தும் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமானதாகும். இதில் வசிப்பவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்.
இந்நிலையில் ஹைவேவிஸ் கண்ணாடி பங்களா பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து குடிநீர் ஹைவேவிஸ் குடியிருப்புகளுக்கு சப்ளையாகிறது. கடந்த வாரம் குடிநீர் பைப் லைனை யானை மிதித்து சேதப்படுத்தியது. இதனால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.
சேதமடைந்த பைப் லைனை சரி செய்ய தொழிலாளர்கள் சென்ற போது வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. எஸ்டேட் நிர்வாகம் கடிதம் கொடுக்க வலியுறுத்தினர். எஸ்டேட் நிர்வாகமோ கடந்த 80 ஆண்டுகளாக உள்ள குடிநீர் திட்டம்.
இப்போது கடிதம் எதற்காக தர வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதில் இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது - போடி டி.எஸ்.பி. பெரியசாமி, இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக பைப் லைனை சரி செய்ய அனுமதித்துள்ளனர்.