/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வன விலங்குகளால் பயிர்கள் சேதம் நஷ்ட ஈடு வழங்க வனத்துறை ஏற்பாடு
/
வன விலங்குகளால் பயிர்கள் சேதம் நஷ்ட ஈடு வழங்க வனத்துறை ஏற்பாடு
வன விலங்குகளால் பயிர்கள் சேதம் நஷ்ட ஈடு வழங்க வனத்துறை ஏற்பாடு
வன விலங்குகளால் பயிர்கள் சேதம் நஷ்ட ஈடு வழங்க வனத்துறை ஏற்பாடு
ADDED : ஜூலை 26, 2025 04:18 AM
ஆண்டிபட்டி: ''வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலங்களில் வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு நிவாரணம் பெறலாம்.'' என, வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை, நடுக்கோட்டை, கொட்டோடைப்பட்டி, திம்மரசநாயக்கனுார், பெருமாள்பட்டி, டி.சுப்புலாபுரம், ஏத்தக்கோவில், மேக்கிழார்பட்டி, மறவபட்டி கிராமங்களை சார்ந்துள்ள மலைப் பகுதியை ஒட்டி விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் ஆண்டு முழுவதும் தங்கள் நிலங்களில் நிலக்கடலை, கப்பைக்கிழங்கு, சோளம், கம்பு, நெல் பயிர்கள், காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இக்கிராமங்களை ஒட்டி உள்ள மலைப் பகுதியில் இருந்து இறங்கி வரும் காட்டுப் பன்றிகள், கரடிகள் புள்ளிமான்கள் ஆகியவை பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.
ஆண்டிபட்டி ரேஞ்சர் அருள்குமார் கூறியதாவது: வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுப்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
தொடர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வனத்துறை சார்பில் அகழி அமைக்கவும் திட்டமிட்டு உள்ளோம். ஆண்டிபட்டி பகுதியில் நடப்பாண்டில் வனவிலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 24 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 703 இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது. வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நிவாரணம் கோரலாம்., என்றார்.