/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி வனப்பகுதியில் காட்டுத்தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சேதம்
/
போடி வனப்பகுதியில் காட்டுத்தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சேதம்
போடி வனப்பகுதியில் காட்டுத்தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சேதம்
போடி வனப்பகுதியில் காட்டுத்தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சேதம்
ADDED : மார் 01, 2024 12:19 AM
போடி : போடி அருகே மங்களகோம்பை வனப்பகுதியில் தீ வைப்பு சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு பரவிய காட்டு தீயால் பல ஏக்கர் மரங்கள் எரிந்து சேதமாயின. இதனால் வன உயிரினங்கள் பலியாவதோடு, இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
போடி பகுதியில் போடிமெட்டு, கழுகுமலை பீட், மங்கள கோம்பை, மதிகெட்டான் சோலை, புலியூத்து, அத்தியூத்து, குரங்கணி, தாவளம், வலசத்துரை, பிச்சாங்கரை, மேலப்பரவு, மரக்காமலை மேல் பகுதி உட்பட பல்வேறு பகுதியில் 75 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வனப்பகுதி அமைந்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இங்குள்ள மரங்களுக்கு சமூக விரோத கும்பல் தீ வைக்கின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக மரப்பட்டைகள், மரங்களை வெட்டி கடத்தப்படுவதும் தொடர்கிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வனவிலங்குகள் தண்ணீரை தேடி மலை அடிவாரப் பகுதிக்கு வர துவங்கி உள்ளன.
இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு கழுகுமலை பீட், மங்களகோம்பை வனப்பகுதியில் தீ வைப்பு சம்பவத்தால் காட்டுத் தீ பரவியது. இரவில் தீயை அணைக்க வனத்துறை முயன்றும், முடியாத நிலையில் நேற்று அதிகாலை சென்று தீயை அணைத்தனர். காட்டுத் தீயால் பல ஏக்கர் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமாயின. இதனால் வன உயிரினங்கள் பலியாவதோடு, வனவிலங்குகளும் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. போடி வனப்பகுதியில் தொடரும் தீ வைப்பு சம்பவத்தை தடுக்கும் வகையில் வனத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

