/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டுத் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்
/
காட்டுத் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 12, 2026 06:10 AM
போடி: போடி அருகே குரங்கணி, கொட்டகுடி, முந்தல், மேலப்பரவு, சிறைக்காடு, கரட்டுப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் எதிர்பாராத விதமாக ஏற்படும் காட்டுத் தீ பரவுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வனச்சரக அலுவலர் நாகராஜ் தலைமை வகித்தார். வனவர்கள் அன்பரசு, நாகராஜ், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
வனச்சரகர் பேசியதாவது: வனப் பகுதியில் தீ வைப்பதால் வன விலங்குகள் உயிர் பலி, இயற்கை அழிவு, வனப்பகுதி பாதிப்பு ஏற்படுகின்றன. வனப்பகுதி அருகே விவசாயம் செய்யும் விவசாயிகள் சமையல் செய்யும் போது கவனத்துடன் தீயை அணைக்க வேண்டும்.
வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது, தீ வைப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், காட்டுத் தீ பரவும் இடங்களை 'ட்ரோன் கேமரா' மூலம் கண்காணிக்கப்பட்டு தீ தடுப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வனப் பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் விழிப்புணர்வு குறித்த பிரசுரங்களை விவசாயிகள், பொதுமக்களிடம் வழங்கினர்.

