UPDATED : நவ 14, 2026 05:54 PM
ADDED : நவ 14, 2026 05:52 PM

தேனி: அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் வனத்துறை சார்பில் தீ தடுப்பு, வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தேனி வனச்சரகர் சிவராம் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வனத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும். விவசாயிகள் விளைநிலத்தில் கழிவுகளுக்கு தீ வைக்க கூடாது. காப்புக்காட்டில் தடையை மீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தீ விபத்து ஏற்பட்டால் 97891 83034 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். வன விலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது. சோலார் மின்வேளியில் அனுமதிக்கப்பட்ட மின்சார அளவை பயன்படுத்த வேண்டும். பயிர்கள் சேதம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலத்தினர், பூச்சிகொல்லி மருந்தை திறந்தவெளியில் வைக்க கூடாது என்றார்.
