/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனக்காப்பாளர் குடியிருப்புகள் பராமரிப்பு இன்றி சேதம்
/
வனக்காப்பாளர் குடியிருப்புகள் பராமரிப்பு இன்றி சேதம்
வனக்காப்பாளர் குடியிருப்புகள் பராமரிப்பு இன்றி சேதம்
வனக்காப்பாளர் குடியிருப்புகள் பராமரிப்பு இன்றி சேதம்
ADDED : நவ 28, 2025 08:09 AM

போடி: போடி வனத்துறை அலுவலகத்தில் வனக்காப்பாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் உரிய பராமரிப்பு இன்றி கட்டடம் முழுவதும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
போடி வனச்சரத்திற்கு உட்பட்ட வனச்சாவடி, செக்போஸ்ட்களில் பணிபுரியும் வனக்காப்பாளர்கள் தங்கும் வகையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடி வனத்துறை அலுவலகத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. சில ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன உரிய பராமரிப்பு இல்லாததால் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் கட்டடம் முழுவதும் சேதம் அடைந்து உள்ளன. ஆபத்தான நிலையில் கட்டடம் இடிந்து விழுந்த நிலையில் உள்ளதால் பணியாற்றும் வனக்காப்பாளர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
சேதம் அடைந்த வனக்காப்பாளர் குடியிருப்புகளுக்கான கட்டடத்தை சீரமைக்க வேண்டும். அல்லது இடித்து விட்டு புதிதாக குடியிருப்புகள் கட்ட மாவட்ட வனத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

