/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெள்ள நீரால் பாதித்த பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஆய்வு
/
வெள்ள நீரால் பாதித்த பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஆய்வு
வெள்ள நீரால் பாதித்த பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஆய்வு
வெள்ள நீரால் பாதித்த பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஆய்வு
ADDED : அக் 19, 2025 09:47 PM
போடி: போடி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் வெள்ளநீர் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
நேற்று காலை பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகர் பகுதியில் வெள்ள சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின் போடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் முல்லை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கோயில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
கூழையனுார், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, தென்னை கன்றுகள், நெற்கதிர், மக்காச்சோளம், கொத்தமல்லி, செண்டு பூக்கள் நீரில் மூழ்கின.
இதனை ஒட்டி நேற்று முன்னாள் முதல்வரும், போடி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பன்னீர்செவ்லம் உப்புக்கோட்டை பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகள், அரசு மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியது குறித்து விவசாயிகள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 'பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.' என, தெரிவித்தார்.