/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிப்பு
/
சுருளி அருவியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிப்பு
சுருளி அருவியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிப்பு
சுருளி அருவியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிப்பு
ADDED : அக் 19, 2025 09:47 PM

கம்பம்: சுருளி அருவியில் வெள்ள நீர் கொட்டுவதால் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சுருளி அருவியில் நேற்று முன்தினம் முதல் வெள்ள நீர் கொட்டி வருகிறது. அக்.17 இரவு மழையால் இரவங்கலாறு , மணலாறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் சுருளி அருவியில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடியது. வனத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நேற்று காலை இரண்டாவது நாளாக வெள்ளம் கொட்டி வருவதால், இரண்டாவது நாளாக குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். வனச்சரகர் பிச்சை மணி தலைமையிலான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'அருவியில் வெள்ள நீர் குறைந்தால் தான் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்துள்ளோம்.