/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளிப்பட்டியில் திராட்சை : பந்தல்கள் சாய்ந்து சேதம்
/
சுருளிப்பட்டியில் திராட்சை : பந்தல்கள் சாய்ந்து சேதம்
சுருளிப்பட்டியில் திராட்சை : பந்தல்கள் சாய்ந்து சேதம்
சுருளிப்பட்டியில் திராட்சை : பந்தல்கள் சாய்ந்து சேதம்
ADDED : அக் 19, 2025 09:47 PM
கம்பம்: கன மழையில் சிக்கி சுருளிப்பட்டி, காமயகவுண்டன் பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த திராட்சை பந்தல்கள் சாய்ந்தன. இதனால் திராட்சை விவசாயிகளுக்கு பலத்த நஸ்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வந்த போதும், அக்.17 இரவு பெய்த கனமழை காரணமாக ரோடுகள், வேளாண், தோட்டக்கலை பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்து உள்ளன. வெள்ள நீர் இன்னமும் வடியாததால் முழுமையான சேதத்தை மதிப்பீடு செய்ய முடியவில்லை. அறுவடைக்கு தயாராக இருந்த நெல், திராட்சை பயிர் சேதம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
சுருளிப்பட்டியில் பல திராட்சை தோட்டங்களில் திராட்சை பந்தல்கள் சாய்ந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த பழங்கள் வீணானது. மேலும் திராட்சை தோட்டங்களுக்குள் வெள்ள நீர் உடைப்பு ஏற்பட்டு புகுந்துள்ளது. இதே போல காமயகவுண்டன் பட்டியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திராட்சை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் முகுந்தன் கூறியதாவது: திராட்சை தோட்டங்களில் பந்தங்கள் சாய்ந்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க ரூ.20 லட்சம் வரை செலவாகும். பல தோட்டங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த பழங்களும் உடைந்து, சேதம் ஏற்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையினர் சேத விபரங்களை அரசிற்கு தெரிவித்து, நிவாரணம் பெற்றுத் தர உதவ வேண்டும்., என்றார்.