/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஈசல் வரத்து அதிகரிப்பு : காளான் வரத்து குறைவு
/
ஈசல் வரத்து அதிகரிப்பு : காளான் வரத்து குறைவு
ADDED : அக் 19, 2025 09:46 PM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடரும் மழையால் ஈசல் வரத்து அதிகரித்துள்ளது. இயற்கையாக முளைக்கும் காளான் குறைந்துள்ளது.
அக்டோபர், நவம்பரில் பெய்யும் மழையில் விவசாய, தரிசு, கண்மாய் நிலங்களில் உள்ள கரையான் புற்றுக்களில் இருந்து ஈசல் வெளிப்படும். மழை முடிந்த பின் லட்சக்கணக்கான ஈசல் மண்ணில் இருந்து வெளிவரும். இவ்வாறு வரும் ஈசல்களை விளக்குப்பொறி வைத்து பிடித்து பக்குவப்படுத்தி கிராமங்களில் உணவாக்கி கொள்கின்றனர்.
மழைக் காலத்தில் இயற்கை காளான்களும் குறிப்பிட்ட இடங்களில் முளைக்கும். இயற்கை காளான்கள் சுவை அதிகம் என்பதால் பலரும் விரும்புவர். கிராமங்களில் இருந்து ஈசல், காளான் ஆகியவற்றை சேகரித்து நகர் பகுதியில் சிலர் விற்பனை செய்தும் சம்பாதிக்கின்றனர்.
ஈசல் சேகரிப்பாளர்கள் கூறியதாவது: கிராமங்களில் பிடிக்கப்படும் ஈசலை உலர்த்தி பக்குவப்படுத்தி தினை அல்லது அரிசி மாவுடன் கலந்து கருப்பட்டி சேர்த்து இடித்து தயார் செய்யப்படும் தின்பண்டம் சத்தும் சுவை மிக்கதாகவும் இருக்கும்.
இயற்கை காளான்களில் சத்து அதிகம் என்பதால் பலரும் விரும்புவர். நடப்பு ஆண்டில் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து மழை பெய்து வருகிறது. தற்போது ஈசல் வரத்து அதிகமாகவும், இயற்கை காளான் விளைச்சல் குறைவாகவும் உள்ளது.
ஈசல், காளான் ஆகியவை கிலோ ரூ.600 வரையும் விலை நிர்ணயம் செய்து சிலர் விற்பனை செய்கின்றனர் என்றனர்.