ADDED : மே 13, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் விழா அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் நடந்தது.
நகர்பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம், பெத்தாட்சி விநாயகர் கோயிலில் கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நிகழ்வில் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், துணை செயலாளர் சுந்தரபாண்டியன், பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட மாணவரணி செயலாளர் தினேஷ்குமார் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.