/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எவ்வகை போதைக்கும் அடிமையாகாமல் மனகவசம் அணிந்து செயல்பட வேண்டும் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேச்சு

ADDED : நவ 24, 2024 06:59 AM

தேனி : 'மாணவர்கள் போதைக்கும் அடிமையாகாமல், மனகவசம் அணிந்து செயல்பட வேணடும்,' என தேனியில் நடந்த விழாவில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேசினார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு கருத்தரங்கம் நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். எஸ்.பி., சிவபிரசாத் முன்னிலை வகித்தார்.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி வரவேற்றார். முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற தலைப்பில் பேசியதாவது: போதைப்பழக்கத்தால் நேரம், பணம், உடல் நலன் பாதிக்கப்படும். போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் முதலில் பொய் கூற துவங்கி, வாக்கு தவறுதல், அடிக்கடி எரிச்சலடைதல் என அவர்கள் நடவடிக்கை கெட்டுப்போய் விடும்.
போதைப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என தன் மானத்தை இழந்து பிறர் காலில் விழுவார்கள். அறிவு மங்கி, சுயமரியாதை இன்றி செயல்படத் துவங்குவர்.
சமூகம், குடும்பம் அவர்களை புறக்கணிக்கும். பலர் குற்ற செயல்களிலும் ஈடுபடுவர்.
சிலர் தங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்வார்கள்.
சிறு பிரச்னைகளை கூட சகித்து கொள்ள முடியாதவர்களாக மாறுவர். அடிக்கடி ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது, எங்கு சென்றாலும் அலைபேசி எடுத்து செல்வது, சமூக ஊடக போதை என பல வகை போதைஉண்டு. எந்தவகை போதை பழக்கத்திற்கும் அடிமையாகாமல் மனக்கவசம் அணிந்து செயல்பட வேண்டும். அவ்வாறு பாதிக்கப்பட்ட நண்பர்களை மீட்க வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். என்றார்.
பெரியகுளம் டி.ஆர்.ஓ., ரஜத் பீடன், சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., வசந்தா, கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை தலைவர் ராஜ்மோகன், நிர்வாகிகள், உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.