/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆம்னி பஸ் கண்ணாடியை உடைத்த மாஜி டிரைவர் கைது
/
ஆம்னி பஸ் கண்ணாடியை உடைத்த மாஜி டிரைவர் கைது
ADDED : பிப் 13, 2024 04:56 AM
பெரியகுளம் : ஆம்னி பஸ்சில் டிரைவர் பணியில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த 'மாஜி' டிரைவர் தனது நண்பர்களுடன் பஸ்களில் கல் எறிந்து முன்பக்க கண்ணாடிகளை சேதப்படுத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் வடகரை குருசடி தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் 39. இவர் திண்டுக்கல்லை தலைமையாக கொண்ட ஆம்னி பஸ் கம்பெனியில், குமுளி- சென்னை பஸ்சில் டிரைவராக உள்ளார்.
இதே பஸ்சில் கைலாசபட்டியைச் சேர்ந்த கோட்டைராஜா 39, டிரைவராக பணிபுரிந்தார். கோட்டைராஜா நடவடிக்கை சரியில்லாததால் நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த கோட்டைராஜா, கைலாசபட்டி பஸ் ஸ்டாப் அருகே தனது நண்பர்கள் சுள்ளானி, முரளி, அமர்நாத், சின்னச்சாமி ஆகியோருடன் இணைந்து செல்வக்குமார் ஓட்டி சென்ற பஸ் மற்றும் அதே கம்பெனி மற்றொரு பஸ் உட்பட இரு ஆம்னி பஸ்களை கற்களால் எறிந்து முன் பக்க கண்ணாடியை சேதப்படுத்தினர்.
சேதமதிப்பு ரூ.50 ஆயிரம். தென்கரை எஸ்.ஐ., சுல்தான் பாட்ஷா, கோட்டைராஜாவை கைது செய்து மற்றவர்களை தேடுகின்றனர்.