/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி அரசியலில் எதிரிகளுடன் துரோகிகளையும் சந்திக்கும் நிலை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு
/
தேனி அரசியலில் எதிரிகளுடன் துரோகிகளையும் சந்திக்கும் நிலை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு
தேனி அரசியலில் எதிரிகளுடன் துரோகிகளையும் சந்திக்கும் நிலை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு
தேனி அரசியலில் எதிரிகளுடன் துரோகிகளையும் சந்திக்கும் நிலை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு
ADDED : அக் 27, 2024 04:07 AM

தேனி : 'தேனி அரசியலில் எதிரிகளுடன், துரோகிகளையும் சந்திக்கும் வித்தியாசமான நிலை உள்ளது' என முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்.தேனி அருகே வீரபாண்டியில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் தயாளன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயலாளர் தீபன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர்கள் ஜக்கையன், ராமர், முன்னாள் அமைச்சர் உதயகுமார், கொள்கை பரப்பு செயலாளர் முத்தையா, அமைப்பு செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், தேனி மாவட்டத்தில் அரசியல் வித்தியாசமானது, சிரமமானது.
இம் மாவட்டத்தில் எதிரிகளுடன் துரோகிகளையும் சேர்த்து சந்திக்கும் நிலை உள்ளது.
தி.மு.க., ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. ஒருசில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றி விட்டு பல வாக்குறுதிகளை எதுவும் செய்யவில்லை. மகளிர் உரிமைத்தொகை சரியாக கொடுக்கவில்லை.
அதுவும் பாதிதான் வழங்கி உள்ளனர். வாக்குறுதியில் 2.20கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் என கூறிவிட்டு, தற்போது 1.10 கோடி பேருக்கு தான் வழங்குகின்றனர். இந்த திட்டமே தி.மு.க., ஆட்சிக்கு வேட்டு வைக்கும். அ.தி.மு.க., திட்டங்கள் பாகுபாடின்றி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வரி குறைப்போம் என கூறினர், ஆனால், சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை பலமுறை கூட்டி உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை முடக்கி உள்ளனர். 2026ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் பயனுள்ள திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும். தி.மு.க.,ஆட்சியில் 3 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் கோடி கடனை அதிகரித்துள்ளனர். மக்கள் உயிர், உடமைக்கு பாதுகாப்பு இல்லை. சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது. விமர்சனங்களை ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்பதில்லை என பேசனார்.