/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி அருகே கார்கள் மோதிய விபத்தில் முன்னாள் அமைச்சரின் உறவினர் பலி
/
போடி அருகே கார்கள் மோதிய விபத்தில் முன்னாள் அமைச்சரின் உறவினர் பலி
போடி அருகே கார்கள் மோதிய விபத்தில் முன்னாள் அமைச்சரின் உறவினர் பலி
போடி அருகே கார்கள் மோதிய விபத்தில் முன்னாள் அமைச்சரின் உறவினர் பலி
ADDED : மே 21, 2025 02:13 AM

போடி:தேனி மாவட்டம் போடி முந்தல் செக்போஸ்ட் அருகே நடந்த கார் விபத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் அக்கா மருமகன் அருண் 47, பலியானார். மேலும் மூவர் காயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜிநகரைச் சேர்ந்தவர் அருண் 47. இவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அக்கா மருமகன். இவரது மனைவி சத்யபாமா 37, மகன் அஜித் பாலாஜி 17, மகள் ரம்யா 12, ஆகியோர் மாருதி ஸ்விப்ட் காரில் மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று திருத்தங்கலுக்கு காரில் திரும்பி வந்தனர். காரை டிரைவர் காளிதாஸ் 29, ஓட்டினார்.
மூணாறு அருகே வட்டவடை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி 64. இவரது மனைவி ஜோதி 61. இருவரும் வீராணுாத்து சென்று விட்டு நேற்று மூணாறுக்கு போடி வழியாக மாருதி 800 காரில் சென்றனர். நேற்று மாலை முந்தல் செக்போஸ்ட் அருகே இரு கார்களும் நேருக்கு நேர் மோதின. இதில் காயம் அடைந்த அருண், சத்தியபாமா, முனியாண்டி, ஜோதி ஆகியோர் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அருண் சிகிச்சை அங்கு இறந்தார். சத்தியபாமா, முனியாண்டி, ஜோதி பிறகு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.