/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
51 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
/
51 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
51 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
51 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
ADDED : மார் 31, 2025 07:05 AM
தேனி: தேனியில் படித்த பள்ளியில் 51 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து, மகிழ்ந்தனர்.
தேனி பாரஸ்ட் ரோட்டில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 1973 1974ம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்வில் 51 ஆண்டுகளுக்குப் பின் ஆசிரியர்கள், மாணவர்கள் சந்தித்திக் கொண்டனர். அப்போது ஆசிரியர்களாக பணிபுரிந்த ஜோசப்ராஜ், முருகேசன், பாலமுத்து, பழனிசாமி, துரைராஜ், அலுவலகப் பணியாளர்களை முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் ஏழை மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்காக ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் சென்னை, சேலம், தஞ்சை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர். தங்கள் மாணவ பருவ நினைவுகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர். விழாவை முன்னாள் மாணவர்கள் சத்யமகேஸ்வரன், விஜயகுமார், அசோகன், ஜெயசீலன் ஒருங்கிணைத்திருந்தனர்.