/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளிக்கு தினமலர் நாளிதழ் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
/
பள்ளிக்கு தினமலர் நாளிதழ் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
பள்ளிக்கு தினமலர் நாளிதழ் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
பள்ளிக்கு தினமலர் நாளிதழ் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
ADDED : ஜூலை 17, 2025 03:18 AM

மூணாறு: மூணாறில் சிறுமலர் உயர் நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் தினமலர் நாளிதழ் வழங்கப்பட்டது.
இந்த பள்ளியில் தமிழ், மலையாளம் மொழிகள் வழி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களி டையே வாசித்தல், கற்றல், பொது அறிவு ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் நாளிதழ்கள் வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பள்ளியில்1992ல் 7ம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் கொண்ட குழு தினமலர் நாளிதழ் வழங்க முன் வந்தனர்.
அதன்படி நேற்று முதல் தினமும் 15 நாளிதழ்கள் வீதம் நடப்பு கல்வியாண்டு இறுதி வரை வழங்கப்படுகிறது.
விஜயகுமார், ஈசாக் ஆகியோர் தலைமை ஆசிரியை சிஸ்டர் ஹேமாவிடம் நாளிதழ்களை வழங்கினர்.