ADDED : ஆக 26, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தேன் சுடர் பெண்கள் பரஸ்பர அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
தேன் சுடர் பெண்கள் இயக்க தலைவர் சரிதா தலைமை வகித்தார். பொருளாளர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். ஆலோசகர் கருத்தம்மாள் வரவேற்றார். ஆரோக்ய அகம் நிறுவன இயக்குனர் சைமன், துணை இயக்குனர் முருகேசன் வாழ்த்திப்பேசினர். எம். சுப்புலா புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பெண்களுக்கான நோயின் தாக்கங்கள் அதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை வசதிகள் குறித்து விளக்கினர். தேன் சுடர் பெண்கள் அமைப்புகள் சார்பில் 2ம் நிலைத் தலைவர்கள் 50 பேரை உருவாக்கவும், பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தவும், பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.