ADDED : ஆக 27, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்; பெரியகுளம் தென்கரை மார்க்கெட் பின்புறம் மீன் மார்க்கெட் வளாகம் கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. நகராட்சி தலைவர் சுமிதா தலைமை வகித்தார்.
கமிஷனர் தமிஹாசுல்தானா முன்னிலை வகித்தார். சரவணக்குமார் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்.
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் 50 சென்ட் இடத்தில் 22 கடைகள் மற்றும் மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் கடைகள் கட்டப்பட உள்ளது.
தி.மு.க., நகர செயலாளர் முகமது இலியாஸ், மார்க்கெட் சங்க தலைவர் சலீம் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்