sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புலியிடம் சிக்கி நான்கு பசுக்கள் பலி

/

புலியிடம் சிக்கி நான்கு பசுக்கள் பலி

புலியிடம் சிக்கி நான்கு பசுக்கள் பலி

புலியிடம் சிக்கி நான்கு பசுக்கள் பலி


ADDED : ஜன 15, 2024 12:09 AM

Google News

ADDED : ஜன 15, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு, : மூணாறு அருகே குண்டளை சான்டோஸ் மலைவாழ் மக்கள் வசிக்கும் காலனியைச் சேர்ந்த சண்முகத்தின் நான்கு பசுக்கள் புலியிடம் சிக்கி பலியான நிலையில் ஒரு பசு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறது.

அவருடைய 5 பசுக்கள் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடினர்.

அவற்றில் 4 பசுக்கள் குண்டளை புதுக்கடி பகுதியில் இறந்து கிடந்ததை நேற்று பார்த்தனர்.

அவை 2 முதல் 4 வயதுடைய பசுக்களாகும். அவற்றின் உடல் பாதி தின்ற நிலையில் கிடந்ததால் புலி தாக்கி கொன்றதாக தெரியவந்தது. அதனை வனத்துறையினரும் உறுதி செய்தனர்.

ஐந்தாவது பசுவை தேடியபோது அருகில் உள்ள காட்டில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது. ஒரே நாளில் 5 பசுக்கள் புலியிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us