/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புகையிலை கடத்திய ராஜஸ்தான் வியாபாரிகள் நால்வர் கைது
/
புகையிலை கடத்திய ராஜஸ்தான் வியாபாரிகள் நால்வர் கைது
புகையிலை கடத்திய ராஜஸ்தான் வியாபாரிகள் நால்வர் கைது
புகையிலை கடத்திய ராஜஸ்தான் வியாபாரிகள் நால்வர் கைது
ADDED : ஏப் 09, 2025 07:20 AM

தேனி: பெங்களூரூவில் இருந்து தேனிக்கு ரூ.1.23 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டு மூடைகளை கடத்தி விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலம் தீபக்சிங் 32, அவரது சகோதரர் விக்ரம்சிங் 31, வியாபாரிகள் மதன்சிங் 39, கிஷோர்சிங் 29, ஆகியோரை போலீசார் கைது செய்து, கார், டூவீலரை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., ஜீவானந்தம், சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையிலான போலீசார் பைபாஸ் ரோடு, போடி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தேனி எஸ்.பி.ஐ., வங்கி காலனி துவரங்குளத்தில் வசிக்கும், ராஜஸ்தான் மார்மிர் மாவட்டத்தைசேர்ந்த தீபக்சிங், அவரது சகோதரர் விக்ரம்சிங் இருவர் டூவீலரில் 2 சிறிய மூடைகளில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்திச் சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேனி பகவதியம்மன் கோயில் தெரு மதன்சிங் 39, சுப்பன்ஷெட்டி தெரு கிஷோர்சிங் 29, ஆகியோருடன் இணைந்து, ராஜஸ்தான் செல்லும் போது புகையிலை வாங்கி வந்து, தேனி மாவட்டம் முழுவதும் சப்ளை செய்து விற்பனையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. தீபக்சிங் கூறிய தகவலின்படி காரில் இருந்த 22 புகையிலை மூடைகளை கடத்திய மதன்சிங், கிஷோர்சிங் உட்பட நால்வரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 1.23 லட்சம் மதிப்புள்ள 195.253 கிலோ புகையிலை 24 மூடைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், டூவீலர் கைப்பற்றப்பட்டன.

