/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கஞ்சா வாங்க கொடுத்த பணம் கேட்டு தகராறு தேனியில் நான்கு வாலிபர்கள் கைது

ADDED : மே 17, 2025 03:39 AM
தேனி: கஞ்சா வாங்க கொடுத்த பணத்தை  கேட்ட  தகராறில்  வாலிபரை வெட்டிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
தேனி காமராஜபுரம் ஒச்சாத்தேவர்  கஞ்சா வாங்குவதற்காக கருவேல் நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனி சேர்ந்த காளியப்பனிடம் ரூ. ஆயிரம் வழங்கினார்.
காளியப்பன் கஞ்சா வாங்கித்தராமலும், பணம் தராமலும்  ஏமாற்றினார்.  இதில் இருவரிடையே பிரச்னை ஏற்பட்டது.
கடந்த மே 15ல் ஓச்சாத்தேவர் கூறியதின் பேரில்  நண்பர்அபினேஷ்வரன்,  யுவராஜ், ஹரிஷ், தாரூன், தனுஷ் ஆகிய 5 பேரும் சென்று காளியப்பனிடம்   பணத்தை கேட்டனர்.  அங்கு இருந்த காளியப்பன் 19,  பிரதீப்குமார் 18, சோலைகவுதம் 18,  விக்னேஷ் 19 ஆகிய நால்வரும் சேர்ந்து பணம் தர மறுத்து  தாக்கினர். இதில் யுவராஜ் கத்தியால் வெட்டப்பட்டு காயமடைந்தார்.
இவர் தேனி மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். யுவராஜ் புகாரில் தேனி போலீசார்  காளியப்பன், பிரதீப்குமார், சோலை கவுதம், விக்னேஷ் ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.