/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி துவக்க விழா
/
அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி துவக்க விழா
ADDED : பிப் 18, 2024 05:10 AM
ஆண்டிபட்டி: தேனி திண்ணை பயிற்சி பட்டறை மற்றும் ஆண்டிபட்டி உயிர்மெய் டிரஸ்ட் சார்பில் ஆண்டிபட்டியில் அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
உயிர்மெய் டிரஸ்ட் தலைவர் டாக்டர் பாப்பையா தலைமை வகித்தார். டிரஸ்ட் நிறுவனர் வேல்ராஜ் வரவேற்றார். திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சன், பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன், வர்த்தக பிரமுகர் கோபாலகிருஷ்ணன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மகேஷ், சவுந்திரவல்லி, ராஜாராம்பாண்டியன் உட்பட பலர் வாழ்த்தி பேசினர். முதல் கட்டமாக 150 மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்பாடுகளை உயிர்மெய் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.