/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாணிப கழக கோடவுன்களுக்கு வந்த இலவச வேட்டி, சேலைகள்
/
வாணிப கழக கோடவுன்களுக்கு வந்த இலவச வேட்டி, சேலைகள்
வாணிப கழக கோடவுன்களுக்கு வந்த இலவச வேட்டி, சேலைகள்
வாணிப கழக கோடவுன்களுக்கு வந்த இலவச வேட்டி, சேலைகள்
ADDED : ஜன 02, 2025 07:09 AM

தேனி: மாவட்டத்தில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்க உள்ள இலவச வேட்டி, சேலைகள் நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களுக்கு கொண்டு வரப்பட்டன.
மாநில அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. பரிசு தொகுப்பு வழங்குதவற்கான டோக்கன் வினியோகிக்கும் பணிகள் நாளை துவங்குகின்றன. ஜன., 9,10ல் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
பொங்கல் பரிசுடன் அரசின் இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் 4.27 லட்சம் அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள தேனி, ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், உத்தமபாளையத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கோடவுன்களில் வேட்டி, சேலைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
எந்த ரேஷன் கடைக்கு எவ்வளவு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவு வந்த பின் அவை உரிய கடைகளுக்கு அனுப்பப்பட உள்ளன. இலவச வேட்டி, சேலைகள் கடந்தாண்டு தாலுகா அலுவலகங்களில் வைத்து பின்னர் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடதக்கது.

