/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் 79 இடங்களில் இலவச இன்டர்நெட் வசதி * 1 ஜி.பி. வரை பி.எஸ்.என்.எல்., வை-பை பயன்படுத்தலாம்

ADDED : நவ 18, 2024 04:26 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் 79 இடங்களில் பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் வசதி செய்யப்பட்டு, இலவசமாக ஒரு ஜி.பி., வரை வை-பை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் அரசு நிறுவனமான ஐ.டி. மிஷன் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இணைந்து 2023 பொது இடங்களில் இன்டர்நெட் மூலம் இலவச வை-பை வசதி செய்யப்பட்டு உள்ளன.
அதன் 2ம் கட்டப் பணிகள் பூர்த்தியான நிலையில், இடுக்கி மாவட்டத்தில் 79 இடங்களில் இன்டர்நெட் வசதி செய்யப்பட்டு உள்ளன. அதன் மூலம் ஒரு ஜி.பி. வரை வைபை இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் பட்சத்தில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். அந்த வசதி பஸ் நிறுத்தம், மாவட்ட அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
மூணாறு பகுதியில் பொறியியல் கல்லுாரி, ஊராட்சி அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், கேரள அரசு பஸ் டிப்போ, இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை, தேவிகுளம் ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என ஏழு இடங்களில் வை-பை வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.