ADDED : செப் 29, 2025 06:06 AM
தேனி,: தேனி கனரா வங்கி சுயதொழில் வேலை வாய்ப்பு மையத்தில் அக்.,6ல் அலைபேசி பழுது நீக்குதல், பெண்களுக்கான எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், அலுமினியம் தயாரிப்பு, புகைப்பட பிரேம் தயாரித்தல், ஸ்கீரின் பிரீன்டிங் இலவச பயிற்சிகள் அக்.,6ல் துவங்குகின்றன.
இந்த பயிற்சிகளில் கிராமப்புறங்களை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ், வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகலுடன் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.