ADDED : மே 21, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி உழவர் பயிற்சி மையத்தில் நாளை(மே 22) கறவை மாடு வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி காலை 10:00 மணி முதல் நடைபெறும். விருப்ப முள்ளவர்கள் மதுரை ரோட்டில் ரயில்வே கேட் அருகே உள்ள தேனி சார்நிலைக்கருவூலம் எதிரில் உள்ள உழவர் பயிற்சி மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் விமல் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.